Monday, September 19, 2011

கலிஸ்ரஸ் பிறந்த நாள் நினைவாக....

பல்கலை வாழ்வில் இரு வருடங்கள் எம்முடன் பயணித்து இன்று எம்மை விட்டு பிரிந்தும் எம் நினைவுகளில் கலந்து விட்ட எம் நண்பன் அன்ரன் யோகராஜா  கலிஸ்ரஸ் கயேந்திரனின்  ( கலிஸ்)  பிறந்த நாள் நினைவாக E/07 மாணவ நண்பர்கள் கடந்த சனிக்கிழமை திருகோண மலையிலுள்ள சிவானந்த தபோ வனத்துக்கு சென்றிருந்தார்கள். அங்கு சென்ற மாணவர்கள் அங்குள்ள சிறுவர்களுக்கு மதிய போசனம் வழங்கி அவர்களுடன் அளவளாவி அன்றைய பொழுதை செலவிட்டு மகிழ்ந்தார்கள். எம் நண்பன் முன்னெடுத்துச் சென்ற பணியை தொடர்ந்து, ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.



Friday, September 16, 2011

கலிஸ்ரஸ்-சுஜீவன் ஞாபகார்த்த கிரிக்கட் தொடர்


E/07 மாணவர்களான கலிஸ்ரஸ்,சுஜீவன் நினைவாக நடை பெற்ற 12 ஓவர்கள் கொண்ட மென் பந்து கிரிக்கட் தொடரில் E/07 மாணவர்கள் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டனர்.
             கடந்த வியாழக்கிழமை (15 -09 -2011) பேராதனை பல்கலைக் கழக மைதானத்தில் மின்னொளியில் E/08  மாணவர்களால் நடாத்தப்பட்ட இத்தொடரில் 5 அணிகள் மோதின. இதில் இறுதிச் சுற்றுக்கு E/07- E/08/A  அணியினர் தெரிவு செய்யப் பட்டனர். 
                விறுவிறுப்பாக நடை பெற்ற இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற  E/07 அணியினர் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தனர். இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய  E/08 அணியினர் 12  ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 62 ஓட்டங்களை பெற்றனர். பதிலுக்கு களமிறங்கிய  E/07 அணியினர் 63 ஓட்டங்களை பெற்று 4 விக்கட்டுகளால் வெற்றி பெற்றனர். இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக நிரஞ்சன் தெரிவு செய்யப் பட்டார். 

Monday, August 8, 2011

நண்பர்களின் நினைவாக....

எமது நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும்  எம்மை விட்டுப் பிரிந்த பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீட 2007 பிரிவு மாணவர்களான  சுஜீவன் - கலிஸ்ரஸ்,  இருவரின் நினைவாக எமது மாணவர்கள் யுத்தத்தால் பெற்றோரை, அனைத்து சொந்தங்களை இழந்த சிறார்களுக்கு ஒரு சிறிய உதவிக்கரம் வழங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். அதன் நிமித்தம் சென்ற சனிக்கிழமை ( 06 - 08 - 2011 ) வவுனியவிலுள்ள புனித டொண் பொஸ்கோ சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கு சென்ற மாணவர்கள் எமது நண்பர்களின் நினைவாக அவர்களின் ஆன்ம அமைதி வேண்டி அருட்தந்தை ஜோன்சன் அடிகளாரின் தலைமையில் ஒரு சிறிய இறைவேண்டுதலுடன் நிகழ்வை ஆரம்பித்தனர். அதை தொடர்ந்து அருட்சகோதரிகளின் உதவியுடன் சிறார்களுக்கு கல்வி உபகரணங்கள்,விளையாட்டுப் பொருட்கள்  மற்றும் உடைகள் போன்ற அடிப்படை அன்பளிப்புகளை வழங்கினார்கள். இந்நிகழ்வுக்கு பூரண  ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து E-07 மற்றும் ஏனைய பிரிவு  மாணவ நெஞ்சங்களுக்கும் எமது நன்றிகள்.



Monday, July 25, 2011

நீங்காத நெஞ்சங்கள்...

Tuesday, July 12, 2011

கணணியில் மால்வேர் வைரஸ்களை தடுப்பதற்கு: System Sweeper

இன்றைய தகவல் தொழில் நுட்பம் பல்வேறு பிரிவுகளில் வளர்ந்து நம் அன்றாட வாழ்க்கைக்கு உதவி செய்து வருகிறது.இதன் வளர்ச்சியின் பரிமாணங்கள் ஒன்றுக் கொன்று தொடர்புடையதாய் பின்னப்பட்டு இருப்பதால் இந்த வலையமைப்பிற்குள்  மால்வேர் வைரஸ் எனப்படும் நமக்குக் கெடுதல் விளைவிக்கும் வைரஸ்கள் மிக எளிதாக வழி கண்டு நம் பயன்பாட்டினை முடக்குகின்றன. எனவே  நமது கணணியைப் பாதுகாப்பாக இந்த  வைரஸ்களிடமிருந்து வைத்துக் கொள்ள ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் தேவைப்படுகின்றன. மேலும் படிக்க...

Thursday, July 7, 2011

கவர்ந்திழுக்கும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள்

ஒரு மேற்கத்திய நாட்டின் நூலகத்தில், புத்தகங்களிலும், லேப்டாப்களிலும் தங்களின் கவனத்தை பதித்து அமர்ந்திருக்கும் பல்வேறு நாட்டின் முகங்களை பார்க்கையில் உலகமயமாக்கலின் விளைவுகளை புரிந்து கொள்ளலாம்.
     யுனெஸ்கோ மதிப்பீட்டின் படி, உயர்கல்விக்காக தங்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளில் சென்று படிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களை விட எதிர் காலத்தில் பன் மடங்கு உயரும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு நாட்டு பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சென்று பயில்வதன் மூலமாக, உலகளாவிய அறிவு சுழற்சி ஏற்பட்டு பல நாடுகளுக்கும் நன்மை ஏற்படுகிறதுமேலும் படிக்க....

Tuesday, July 5, 2011

உலகின் மிகப் பெரும் பெண்கள் பல்கலைக் கழகம்!

உலகில் ஒவ்வொரு நாடுகளும் தங்கள் நாட்டின் கல்வி வளர்ச்சியில் மிகவும் முனைப்புடன் திகழ்ந்து வருகிறது. காரணம் சிறந்தக் கல்விதான் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். அந்த வகையில் உலகமே திரும்பிப் பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்தத் துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவூதி அரேபியா ரியாத் தலை நகரில் என்றால் நம்புவீர்களா !? மேலும் படிக்க...

Tuesday, June 28, 2011

இலங்கையில் தனியார் பல்கலைக் கழகங்கள் அவசியமா?

"எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு"
     கல்வி ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றி அமையாத ஒன்று. இலங்கையை பொறுத்த வரையில், இது கல்வி தரத்தில் உயர் நிலை வகிக்கும் நாடு. விருத்தி அடைந்த நாடுகளுக்கு நிகராக இலங்கையின் கல்வி அறிவு வீதம் காணப்பட நாட்டின் இலவச கல்வியே பிரதான காரணம். இலவச கல்வியானது நாட்டின் தேசிய தலைவர்களின் முனைப்பான தொடர் போராட்டங்களின் விளைவாக நடைமுறைக்கு வந்தது. இங்கு, c.w.w.கன்னங்கரா விதந்து குறிப்பிட வேண்டியவர். இதன் விளைவாக 1947 களின் பின் நாம் பாலர் வகுப்பு முதல் பல்கலைக் கழகம் வரை இலவசக் கல்வியை பெற முடிந்தமை நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் கிடைத்த வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். இக் கல்வி முறை உலகளாவிய ரீதியில் தனித்துவம் மிக்கது.  இலங்கை உயர் கல்வி அறிவு வீதம் கொண்ட நாடாக இருந்த போதிலும் அதன் கல்வி தரம் சர்வதேச நாடுகளுக்கு நிகராக இல்லை எனவும், நடைமுறைக்கு பொருத்தம் குறைந்த கல்வி எனவும் சில கருத்து நிலைகள் உலா வருகின்றன. இலங்கையை பொறுத்த வரை பெருமளவில் தரமான கல்வி அரசினால் மட்டுமே வழங்கப் பட்டு வருகிறது. இருப்பினும் தற்போது தனியார் பல்கலைக் கழகங்களை ஆரம்பிப்பதில் அரசு பெரும் முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்து நிலைகள் பல தரப்பினரிடையேயும் நிலவுகின்றது. எனவே தனியார் பல்கலைக்கழகங்களின் வருகை இலங்கையின் கல்வி புலத்தில் எவ்வாறான மாறுதலை உண்டு பண்ணும் என்பதனை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கம். மேலும் படிக்க...      

Friday, June 24, 2011

நெருடல்கள்..!




சிட்டுக்குருவியின் 
வண்ண இறக்கைகளை...
திருப்பி தந்தான் 
இறைவன்
சீண்டிப் பார்த்தேன்...
தடவிப் பார்த்தேன்...
அத்தனையும் - என்
தோழர்கள்....
தோழிகளின்....
நெருடல்கள்..! 

பல்கலை நட்பு..!


பல்கலைக்கழகம்.....புதியதொரு உலகம்
புதிய அறிமுகங்கள்.....அதில் சில தெரிந்த முகம்
புதிய நட்புகள் பிறந்தது சில குறும்புகளுடன் 
முதலாம் வருட நட்பு.... மறக்கமுடியுமா..?
இடைவேளையில் சிற்றுண்டிகள் பலவிதம் 
நண்பர்களுடன் பகிரும் ஆனந்தம் இனி வருமா...?
பரீட்சை அண்மையில் ஒன்றாக படித்த காலம்
புரியாத புதிர்களுடன் தெளிந்த காலம்....!
இது போல் ஒரு காலம் வருமா....!
அது ஒரு அழகிய இனிய காலம்....!
முதலாம் வருட விடுமுறை.... !
புதிய முகங்களுடன் குதூகலம்....சுற்றுலா..!
ஆஹா ஆஹா..... இனி வருமா...???
இரண்டாம்  வருட ஆரம்பம்.....!
பழைய நினைவுகளுடன் கூடி வந்து
மூன்றாம் வருடமும் தொடர்கிறது....
இடைநேரம்.... அரையாண்டு பயிற்சி
சிறியதொரு பிரிவு நிரந்தரமில்லாப் பிரிவு
சிற்சில காயங்கள்..... ஆனால்
அது பிரியாது தொடரும் நட்பு..!

தொடர்கிறது எம் பயணம்...!


கண்கள் முழுதும்   
கனவுகளுடன்..
எதிர்காலம் நோக்கி...
எம் கால்களும்
நினைவுகளுமாய்....
இனிய நட்பின்
நெருடல்களுடன்...
தொடர்கிறது எம் பயணம்...!

Tuesday, June 21, 2011

இங்கிருந்து சில புள்ளிகள்.....!



சொர்க்கங்களின் சில வாசல்களும்
நரகங்களின் பல வடிவாய்களும்
இங்கே தான்

படிப்பில் ஆன்மாவின் தொலைவும் 
படிப்பில் ஆன்மாவின் தேடலும்
இங்கே தான்

மனிதனின் - மகான்களும்
மனிதனின் - போலிகளும் 
இங்கே தான்

நீயும் - நானுமாக நானும் - நீயுமாக
புரிந்து கொள்வதும் இங்கே தான்
பிரிந்து கொள்வதும் இங்கே தான்

இங்கு வந்தபின் தான் - என்னில்
பல நாங்களை - அறிந்து கொண்டேன்
மொத்தத்தில் என் ஆன்மாவின் 
கோலங்களுக்கு
இங்கிருந்து சில புள்ளிகள்....!

Monday, June 20, 2011

பேராதனை மாணவர் விடுதிகள்

 இலங்கையில் உள்ள பெரும் பாலான பல்கலைக் கழகங்களில் மாணவருக்கான விடுதிகள் உள்ளன. இவை  பல்கலை கழக சட்ட
திட்டங்களுக்கு அமைவாக மாணவர் சேவைக் கிளையினால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
              பல்கலைக் கழக வாழ்க்கையில் விடுதி வாழ்க்கை என்பது மறக்க முடியாதது.காலத்தால் அழியாத நினைவுகளை விட்டுச் செல்லும். அந்த வகையில் பேராதனைப் பல்கலைக்கழகமானது பெரும்பாலான மாணவர்களுக்கு தங்குமிட வசதியை வழங்கி வருகிறது. இங்குள்ள 15 மண்டபங்களிலும் 4 பிக்கு விடுதிகளிலும் சுமார் 3000 க்கு மேற்பட்ட மாணவர்கள் தங்கி தமது பட்டப் படிப்பை மேற்கொள்கின்றனர். அத்துடன் மகா இலுப்பலமாவில் உள்ள விவசாய பீட வளாகத்தில் உள்ள விடுதியானது 1ம் வருட மாணவர்களுக்கு தங்குமிட வசதியை வழங்குகிறதுஇது பேராதனையில் இருந்து சுமார் 130km தூரத்தில் அமைந்துள்ளது. விடுதிகளின் ஒழுக்கங்களை பேணுவதில் விடுதி காப்பாளர்களின் பங்கு அளப்பரியது. இவர்கள் கல்வி சார், சாரா உழியர்களாக இருப்பார்கள்.
                       விடுதிகள் கல்வி கற்கும் வசதியுடைய படுக்கை அறைகளைக் கொண்டது.ஒவ்வொரு அறைகளிலும் சராசரியாக 3 மாணவர்கள் மாணவர்கள் தங்கி இருப்பார்கள். பேராதனைப் பல்கலைக்கழக விடுதிகளை பொறுத்த வரை தவணைக் கட்டணமாக 750 ரூபா அறவிடப்படுகிறது. அத்துடன் இங்குள்ள சிற்றுண்டிச் சாலைகளில் குறைந்த விலைகளில் சாப்பாடுகள் வழங்கப் பட்டு வருகிறது.
 .



பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதிகள் வருமாறு:
                                
  ஆண்களுக்கானது:-
  •  ஜேம்ஸ் பீரிஸ் மண்டபம்

  • அருணாச்சலம் மண்டபம்

  • அக்பர்நெல் மண்டபம்
                    
  • மார்கஸ் மண்டபம்
                
             

  • சரசவி உயன மண்டபம்
  • ஜெயதிலகே மண்டபம்


                   




  • ஹிந்தகல மண்டபம்
  • புதிய அக்பர் மண்டபம்



  • சார் ஐவரர் ஜென்னிங்க்ஸ்   மண்டபம்
                                      
   பெண்களுக்கானது:-
  • ஹில்டா ஒபெயேசெகரா மண்டபம்


      
        
  • விஜேவர்தன மண்டபம் 

        

  • ராமநாதன் மண்டபம் 
                 



  • சங்கமித்த மண்டபம்
       


     பிக்குகளுக்கானது:-
  • சங்கரமைய
  • கேஹெல்பன்னால மண்டபம்

    Saturday, June 18, 2011

    பேராதனைப் பல்கலைக் கழகம்


    இலங்கையின் கடைசி இராஜதானியின் தலைநகராக விளங்கிய கண்டி நகருக்கு அண்மையில் பேராதனைப் பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. இலங்கையின் முதல் பல்கலைக் கழகத்தின் இன்றைய வாரிசாக விளங்குவதும் இதுவே. பல்கலைக்கழகத்திற்கான நிதியுதவி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) இடமிருந்து பெறப்படுகின்றது.
                                                                                                                                   
    இலங்கையின் தலைநகரான கொழும்பில் இருந்து 110 கிலோமீட்டர்தூரத்திலும், கண்டி நகருக்குச் சுமார் 8 கிமீ. தொலைவிலும் உள்ள பேராதனை என்னும் இடத்தில் ஹந்தானை மலைச்  சாரலில் இப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பேராதனை இயற்கை அழகு வாய்ந்த ஒரு பகுதியாகும். இலங்கையின்சுற்றுலா முக்கியத்துவம் உடையதாக விளங்கும் பேராதனை தாவரவியற் பூங்காவும் இங்குதான் அமைந்துள்ளது. இப் பல்கலை கழகத்துக்கான  பிரதான நுழைவாயில் கலாஹா வீதி ஆகும். மகாவலி ஆற்றின் ஒரு பக்கம் பொறியியற் பீடமும் மறு பக்கம் ஏனைய பீடங்களும் அமைந்துள்ளன. அனைத்து பீடங்களையும்   இணைக்கும் நோக்கில் ஒற்றைத் தூணின் உதவியுடன் பாலமொன்று பேராசிரியர் துரைராஜா அவர்களால் நிர்மாணிக்கப்பட்டது.  இதுவே தற்காலத்தில் "அக்பர் பாலம்" என்று அழைக்கப்படுகிறது.

    இலங்கையின் முதலாவது பல்கலைக் கழகம், இலங்கைப் பல்கலைக்கழகம்(University of Ceylon) என்ற பெயரில் 1942 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் 1952 ஆகஸ்ட் 6 ஆம் நாள் பேராதனைக்கு இடம் மாறியது. அன்றிலிருந்து 1972 இல் இலங்கையிலிருந்த அனைத்துப் பல்கலைக் கழகங்களையும் இலங்கைப் பல்கலைக் கழகம் (University of Sri Lanka) என்ற ஒரே அமைப்பின் கீழ்க் கொண்டுவரும்வரை, இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனை (University of Ceylon, Peradeniya) என அழைக்கப்பட்டது. 1972 இல், இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனை வளாகம் (University of Sri Lanka - Peradeniya Campus) எனப் பெயர் மாற்றப்பட்டது. 1978 ஆம் ஆண்டு பல பகுதிகளிலும் அமைந்திருந்த இலங்கைப் பல்கலைக் கழகத்தின் வளாகங்கள் தனித்தனியான பல்கலைக் கழகங்கள் ஆனபோது, இது பேராதனைப் பல்கலைக் கழகம் ஆகியது.        

                                                                          
    "Knowledge is the eye unto all” என்பது மகுட வாசகமாகும். இங்கே விவசாய பீடம், கலைப் பீடம், பல்மருத்துவப் பீடம், பொறியியல் பீடம், மருத்துவப் பீடம், விஞ்ஞான பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம் என்பவற்றுடன் கால்நடை முருத்துவமும், கால்நடை அறிவியலும் இணைந்த ஒரு பீடமும் உள்ளன. ஏறத்தாழ 6600 மாணவர்கள்  பட்டப் படிப்பை முடித்துக்கொண்டு வருடாந்தம் வெளியேறுகின்றனர்.