Tuesday, May 15, 2012

பல்கலை வாழ்க்கை ....


பிறந்த குழந்தையை அரவணைக்கும் தாயைப்போல
நம்மை அரவணைத்த நம் ராமநாதன் விடுதி

முதலாண்டில் கழுகாய் நம்மை கொத்திச்
செல்ல முயன்ற சீனியர் மாணவர்கள்

நம்மை Albert Einstein-களாக மாற்ற
முயன்ற புரொபஸர்கள்

நம்மை கட்டுக்கோப்புடன் நடத்த முயன்று
வெற்றிக்கனியை பறிக்காத விடுதி Warden

common room இல் படிக்க சென்று
மற்றவர்களுடன் நாம் இட்ட சண்டைகள்

பரீட்சைக்கு முந்தைய இரவு நாம் நடத்திய
பட்டிமன்றங்கள் மற்றும் அரட்டை அரங்கங்கள்

1ம் வருடத்தில் குறைய result எடுத்து
அழுத நண்பியின் கண்ணீர் துளிகள்

வெட்டிக் கதைகளும் இணைய தளமுமாக
நாம் கழித்த அர்த்தமற்ற ராத்திரிகள்

பல்லேகலவில் நாம் பார்த்து ரசித்த
பாக்-நியூ கிரிக்கெட் போட்டி

சனி ஞாயிறுகளில் பல்கூட துலக்காமல்
நாம் குடிக்கும் ஒன்றரை கப் tea

கூட்டம் கூட்டமாக ஒரே அறையில் நாம்
கண்டுகளித்த வண்ணமயமான திரைப்படங்கள்

ஒராண்டு முடிந்ததும் பழிவாங்கும் படலமாக
நம் Juniors-ஐ நாம் படுத்திய பாடு

lecturer hall இல் மெய் மறந்து தூங்கி
நாம் போட்ட  குறட்டைகள்

பொறுப்பற்று சுற்றிய நம்மை ஆறு மாதத்திற்கு
ஒருமுறை நெறிப்படுத்திய Semester Exam

வீட்டிற்கு செல்ல அங்கங்கே நாம்
ஒதுக்கும் ‘சின்னஞ்சிறு’ விடுமுறைகள்

உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் Cellphone-ல்
விடிய விடிய நாம் வறுத்த’ கடலைகள்

எப்போதுமே கடைசி நாளில் நாம்
சமர்ப்பிக்கும் Recordகள், Assignment-கள்


நிலஅதிர்ச்சியாலும் சுனாமியாலும்கூட அசைக்க முடியாத
நம்மை அதிர வைத்த University Result-கள்

நாமிட்ட தேவையற்ற சச்சரவுகளும் அதில்
இருந்து கற்ற கசப்பான பாடங்கள்

அக்பர் பாலத்தில் நாம் நின்று
ரசித்த இயற்கை காட்சிகள்

வெள்ளி கிழமைகளில்  குறிஞ்சி குமரனில்
நாம் கட்டி பழகிய மாலைகள் 

தினந்தோறும் வகுப்பிற்கு லேட்டாக சென்று
நாம் ‘maintain’ செய்த Punctuality

கஜினி முகமது போல Training க்காக விடாமுயற்சியுடன்
நாம் ஏறி இறங்கிய Company-கள்

மூன்றே மாதங்களில் முடிக்க வேகவேகமாய்
நாம் செய்து ‘வாங்கிய’ Project-கள்

உலகம் சுற்றும் வாலிபர்களாக நாம்
சுற்றிக் களித்த வருட சுற்றுலாக்கள்

வகுப்புக்கு மட்டம் போட தினமும் Technique-ஆக
நாம் கொண்டாடிய Birthdayகள்

வைத்திருக்கும் எல்லா Equipment-யும்
பொசுக்கி நாம் செய்த Lab வகுப்புகள்

பார்த்து எழுதி notice board இல் தொங்கிய
நம் lab reports என்று எல்லாமே

இப்போது திரும்பி பார்த்தால் “குறும்பு” செய்தது
போன்ற உணர்வை ஏற்படுத்தினாலும் இவையெல்லாம்
தான் எனக்கு வாழ்க்கையை” சொல்லி கொடுத்தது.

Monday, September 19, 2011

கலிஸ்ரஸ் பிறந்த நாள் நினைவாக....

பல்கலை வாழ்வில் இரு வருடங்கள் எம்முடன் பயணித்து இன்று எம்மை விட்டு பிரிந்தும் எம் நினைவுகளில் கலந்து விட்ட எம் நண்பன் அன்ரன் யோகராஜா  கலிஸ்ரஸ் கயேந்திரனின்  ( கலிஸ்)  பிறந்த நாள் நினைவாக E/07 மாணவ நண்பர்கள் கடந்த சனிக்கிழமை திருகோண மலையிலுள்ள சிவானந்த தபோ வனத்துக்கு சென்றிருந்தார்கள். அங்கு சென்ற மாணவர்கள் அங்குள்ள சிறுவர்களுக்கு மதிய போசனம் வழங்கி அவர்களுடன் அளவளாவி அன்றைய பொழுதை செலவிட்டு மகிழ்ந்தார்கள். எம் நண்பன் முன்னெடுத்துச் சென்ற பணியை தொடர்ந்து, ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.



Friday, September 16, 2011

கலிஸ்ரஸ்-சுஜீவன் ஞாபகார்த்த கிரிக்கட் தொடர்


E/07 மாணவர்களான கலிஸ்ரஸ்,சுஜீவன் நினைவாக நடை பெற்ற 12 ஓவர்கள் கொண்ட மென் பந்து கிரிக்கட் தொடரில் E/07 மாணவர்கள் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டனர்.
             கடந்த வியாழக்கிழமை (15 -09 -2011) பேராதனை பல்கலைக் கழக மைதானத்தில் மின்னொளியில் E/08  மாணவர்களால் நடாத்தப்பட்ட இத்தொடரில் 5 அணிகள் மோதின. இதில் இறுதிச் சுற்றுக்கு E/07- E/08/A  அணியினர் தெரிவு செய்யப் பட்டனர். 
                விறுவிறுப்பாக நடை பெற்ற இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற  E/07 அணியினர் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தனர். இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய  E/08 அணியினர் 12  ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 62 ஓட்டங்களை பெற்றனர். பதிலுக்கு களமிறங்கிய  E/07 அணியினர் 63 ஓட்டங்களை பெற்று 4 விக்கட்டுகளால் வெற்றி பெற்றனர். இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக நிரஞ்சன் தெரிவு செய்யப் பட்டார்.