Tuesday, June 21, 2011

இங்கிருந்து சில புள்ளிகள்.....!



சொர்க்கங்களின் சில வாசல்களும்
நரகங்களின் பல வடிவாய்களும்
இங்கே தான்

படிப்பில் ஆன்மாவின் தொலைவும் 
படிப்பில் ஆன்மாவின் தேடலும்
இங்கே தான்

மனிதனின் - மகான்களும்
மனிதனின் - போலிகளும் 
இங்கே தான்

நீயும் - நானுமாக நானும் - நீயுமாக
புரிந்து கொள்வதும் இங்கே தான்
பிரிந்து கொள்வதும் இங்கே தான்

இங்கு வந்தபின் தான் - என்னில்
பல நாங்களை - அறிந்து கொண்டேன்
மொத்தத்தில் என் ஆன்மாவின் 
கோலங்களுக்கு
இங்கிருந்து சில புள்ளிகள்....!

1 comment:

  1. Training நல்லா போகுது போல இருக்கு.But Supperdi Continue ...

    ReplyDelete