கவர்ந்திழுக்கும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள்


ஒரு மேற்கத்திய நாட்டின் நூலகத்தில், புத்தகங்களிலும், லேப்டாப்களிலும் தங்களின் கவனத்தை பதித்து அமர்ந்திருக்கும் பல்வேறு நாட்டின் முகங்களை பார்க்கையில் உலகமயமாக்கலின் விளைவுகளை புரிந்து கொள்ளலாம்.

       யுனெஸ்கோ மதிப்பீட்டின் படி, உயர்கல்விக்காக தங்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளில் சென்று படிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களை விட எதிர் காலத்தில் பன் மடங்கு உயரும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு நாட்டு பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சென்று பயில்வதன் மூலமாக, உலகளாவிய அறிவு சுழற்சி ஏற்பட்டு பல நாடுகளுக்கும் நன்மை ஏற்படுகிறது.


     தங்களின் தாய் நாட்டையும் உறவினர்களையும் விட்டு, முன்பின் பார்த்திராத ஏதோ ஒரு நாட்டிற்கு செல்ல இவர்களை தூண்டுவது எது? மேலும் பெற்றோர்களும் மாணவர்களும் தங்களின் திறமைக்கு சவாலாக இருக்கக்கூடிய வெளிநாட்டு பல்கலைக்கழகத்தை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள் மற்றும் அந்த முடிவு ஒரு மாணவனின் வாழக்கையை சிறப்பாக கட்டமைக்கிறது என்று எப்படி அவர்கள் நம்புகிறார்கள்?

   இதற்கு, மற்ற புலம்பெயர்பவர்களைப் போலவே, மாணவர்கள் வெளிநாடு செல்வதற்கான காரணங்களில், சிறப்பான வாழ்க்கை வளத்திற்கான தேடலும் முக்கியமானது.

     மேலும் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் வாங்கினால் நல்ல வேலை கிடைக்கும் என்று மாணவர்கள் நம்புகிறார்கள். இதைத்தவிர ஆங்கில மொழியில் நன்கு புலமை பெறுவதும் முக்கிய அம்சமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. சர்வதேச வணிகம், மீடியா மற்றும் கல்வித்துறையில் ஆங்கில ஆதிக்கம் இருப்பதே இதற்கு காரணம்.

     ஆனால் இத்தகைய காரணங்கள் தவிர்த்து வேறு சில முக்கிய பயன்விளைவுகளும் மாணவர்கள் வெளிநாடு சென்று படிப்பதில் இருக்கின்றன. முன்பின் பார்த்திராத ஒரு புதிய இடத்தில் சென்று வருடக்கணக்கில் படிப்பதானது, மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்த்து, வாழ்க்கையை பற்றிய ஒரு பரந்த அளவிலான புரிதலை பெறச்செய்து, வேறுபாடுகளை எதிகொள்ள உதவுகிறது.

    அதேசமயம் வெளிநாட்டில் வாழ தொடங்குவதிலும் சில படிநிலைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. உதாரணமாக, நீங்கள் பிரிட்டனில் படித்து அங்கேயே வாழ விரும்பினால், அங்குள்ள வாழ்க்கை முறைகளை பழக வேண்டும். அங்குள்ள பலதரப்பட்ட கலாச்சார பின்னணி கொண்ட நகரங்களின் சூழல்களை பழகுதல், அங்குள்ள உணவு முறைகளைப் பழகுதல் போன்றவற்றை நிறைவு செய்த பின்னரே அங்கே வாழ்வதைப் பற்றி ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க முடியும். இல்லையெனில் நல்ல தகுதியுடன் தாய் நாடு திரும்பி இங்கே சிறப்பான வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்.

      தாங்கள் ஏதோவொரு விதத்தில் தேர்ந்தெடுக்கும் ஒரு வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் சிறப்பான கல்வியை தந்து, பட்டம் வழங்கி அதன்மூலம் சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும் என்று எப்படி பெற்றோர்களும் மாணவர்களும் முடிவு செய்கிறார்கள்?

        எனவே பொதுவாக அவர்கள், வெளிநாட்டு மாணவர்கள் கொண்டுவரும் பணத்திலேயே குறியாக இருந்து, தரமற்ற கல்வியை வழங்கும் சில பல்கலைக்கழகங்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

               “வெளிநாட்டு கல்விக்காக போதிய பணத்தை மாணவர்கள் செலவிட தயாராக இருந்தால், அவர்கள் விரும்பும் கல்வியை விரும்பும் வகையில் பெற முடியும். இது சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு மத்தியில் போட்டியை உருவாக்கி, மாணவர்களை கவர்ந்திழுக்கும் என்பதில் ஐயமில்லைஎன்று கல்வியாளர்கள் உறுதிபட கூறுகின்றனர்.