பல்கலை வாழ்வில் இரு வருடங்கள் எம்முடன் பயணித்து இன்று எம்மை விட்டு பிரிந்தும் எம் நினைவுகளில் கலந்து விட்ட எம் நண்பன் அன்ரன் யோகராஜா கலிஸ்ரஸ் கயேந்திரனின் ( கலிஸ்) பிறந்த நாள் நினைவாக E/07 மாணவ நண்பர்கள் கடந்த சனிக்கிழமை திருகோண மலையிலுள்ள சிவானந்த தபோ வனத்துக்கு சென்றிருந்தார்கள். அங்கு சென்ற மாணவர்கள் அங்குள்ள சிறுவர்களுக்கு மதிய போசனம் வழங்கி அவர்களுடன் அளவளாவி அன்றைய பொழுதை செலவிட்டு மகிழ்ந்தார்கள். எம் நண்பன் முன்னெடுத்துச் சென்ற பணியை தொடர்ந்து, ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.
Monday, September 19, 2011
Friday, September 16, 2011
கலிஸ்ரஸ்-சுஜீவன் ஞாபகார்த்த கிரிக்கட் தொடர்
E/07 மாணவர்களான கலிஸ்ரஸ்,சுஜீவன் நினைவாக நடை பெற்ற 12 ஓவர்கள் கொண்ட மென் பந்து கிரிக்கட் தொடரில் E/07 மாணவர்கள் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டனர்.
கடந்த வியாழக்கிழமை (15 -09 -2011) பேராதனை பல்கலைக் கழக மைதானத்தில் மின்னொளியில் E/08 மாணவர்களால் நடாத்தப்பட்ட இத்தொடரில் 5 அணிகள் மோதின. இதில் இறுதிச் சுற்றுக்கு E/07- E/08/A அணியினர் தெரிவு செய்யப் பட்டனர்.
விறுவிறுப்பாக நடை பெற்ற இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற E/07 அணியினர் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தனர். இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய E/08 அணியினர் 12 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 62 ஓட்டங்களை பெற்றனர். பதிலுக்கு களமிறங்கிய E/07 அணியினர் 63 ஓட்டங்களை பெற்று 4 விக்கட்டுகளால் வெற்றி பெற்றனர். இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக நிரஞ்சன் தெரிவு செய்யப் பட்டார்.
Monday, August 8, 2011
நண்பர்களின் நினைவாக....
எமது நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மை விட்டுப் பிரிந்த பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீட 2007 பிரிவு மாணவர்களான சுஜீவன் - கலிஸ்ரஸ், இருவரின் நினைவாக எமது மாணவர்கள் யுத்தத்தால் பெற்றோரை, அனைத்து சொந்தங்களை இழந்த சிறார்களுக்கு ஒரு சிறிய உதவிக்கரம் வழங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். அதன் நிமித்தம் சென்ற சனிக்கிழமை ( 06 - 08 - 2011 ) வவுனியவிலுள்ள புனித டொண் பொஸ்கோ சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கு சென்ற மாணவர்கள் எமது நண்பர்களின் நினைவாக அவர்களின் ஆன்ம அமைதி வேண்டி அருட்தந்தை ஜோன்சன் அடிகளாரின் தலைமையில் ஒரு சிறிய இறைவேண்டுதலுடன் நிகழ்வை ஆரம்பித்தனர். அதை தொடர்ந்து அருட்சகோதரிகளின் உதவியுடன் சிறார்களுக்கு கல்வி உபகரணங்கள்,விளையாட்டுப் பொருட்கள் மற்றும் உடைகள் போன்ற அடிப்படை அன்பளிப்புகளை வழங்கினார்கள். இந்நிகழ்வுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து E-07 மற்றும் ஏனைய பிரிவு மாணவ நெஞ்சங்களுக்கும் எமது நன்றிகள்.
Subscribe to:
Posts (Atom)







