பேராதனை பல்கலைக்கழக குறிஞ்சிக் குமரன் ஆலயம் பேராதனையில் குறிஞ்சி நிலத்தில் குன்றின் மேல் இந்த கோயில் அமைந்துள்ளது. சரஸ்வதியின் உறைவிடமாக வர்ணிக்கப்படும். பேராதனை பல்கலைக்கழகமே இங்கு இலங்கை பல்கலைக்கழகங்களில் அதிக பீடங்கள் அமைந்த பல்கலைக்கழகமாகும். இங்குள்ள இந்து சமூகம் – விரிவுரை யாளர்கள், கல்விசார், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள், வணங்கும் ஒரு கோயிலாகவும் கண்டி வர்த்தக சமூகம் – பேராதனை, உட பேராதனை மக்கள் வணங்கும் ஆலயமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.
1977, 1983 இனக் கலவரங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட இந்த கோயில் மீண்டும், மீண்டும் முருகன் அருளால் சிறப்புப் பெற்றுக் காணப்படுகிறது.அரசாங்க பாடப் புத்தகத்திலும் ஒரு அம்சமாக இக் கோயில் இடம் பிடித் துள்ளது. இந்த பல்கலைக்கழகத்திற்கு வருகை தரும் அனைத்து இந்து மாணவர்களும் இந்த கோயிலில் தொண்டு புரிவதாலேயே இக் கோயில் சிறப்புப் பெற்று வருகிறது.
பேராதனை பல்கலைக்கழகம் 1942 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. முதலா வது உபவேந்தர் சேர் ஐவர் ஜெனிங்ஸ் காலத்திலேயே சகல மதங்களுக்கும் வழிப்பாட்டு தலம் வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதன் பின் 1951 ம் ஆண்டு பேராசிரியர் த. நடராசா இந்து ஆலயம் அமைக்கப்பட வேண்டும் என்ற ஆவலில் தனது தாயார் திருமதி சிவானந்தம் தம்பையாவின் ஞாபகார்த்தமாக உபவேந்தர் சேர் ஐவர் ஜெனிங்ஸ்சிடம் ரூபா 25 ஆயிரம் ரூபாவை வழங்கினார். பேராசிரியர் த. நடராசாவுடன், சேர். கந்தையா வைத் தியநாதன் இணைந்து இந்து மாணவர் சங்க ஆதரவுடன் கோயில் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சேர் கந்தையா வைத்தியநாதன் கொழும்பின் பிரபல வர்த்தக நிறுவனமான செட்டிநாட் கோர்பரேஷனில் 15 ஆயிரம் ரூபாவை நன்கொடையாக பெற்றுள்ளார்.
1961 ஆம் ஆண்டு விஞ்ஞான மருத் துவ பீடங்களும், 1964 இல் பொறியியற் பீடமும் இங்கு ஆரம்பிக்கப்பட்ட பின் இந்து மாணவர்களின் தொகை அதிகரி த்தது. தற்காலிக பஜனை அறையில் வழிபாட்டுகளை செய்து வந்தவர்கள் மாணவர் தொகை அதிகரிப்பால் பஜனை அறையிலும் இட நெருக்கடி ஏற்படவே, கண்டி நகருக்கு வழிபாடுகளுக்காக செல்லத் தொடங்கினர். 1966 களில் கோயில் ஒன்றின் அவசியம் பெரிதும் உணரப்பட்டது. இக் காலத்தில் பெளத்த, இந்து, முஸ்லிம், கத்தோலிக்க, கிறிஸ்தவ மதத்தலங்கள் அமைப்பதற்கு இடம் ஒதுக்கும் நடவடிக்கையும் நடைபெற் றுள்ளது. அப்போது முருகன் அருளால் தற்போது கோயில் அமைந்துள்ள குன்றே திருவுலச் சீட்டு மூலம் கிடைத்துள்ளது. இந்து மாணவர் சங்க தலைவராக முன்னர் கடமையாற்றிய பேராசிரியர் பேரம் பலம் கனகசபாபதி மற்றும் இந்து மாணவர் சங்க தலைவரான பொறியியற் பீட மாணவன் து. அப்புலிங்கம் ஆகியோரது அயராத முயற்சியால் 1966 இல் அடிக்கல் நாட்டப்பட்டது. 1974ம் ஆண்டு வரை இந்து மாணவர் சங்கத் தலைவராகத் திகழ்ந்த பேராசிரியர் பே. கனகசபாபதி இந்த கோயில் முன்னேற்றத்திற்கு பெரிதும் பாடுபட்டவர்.
பேராசிரியர் த. சிவப்பிரகாசபிள்ளை, பேராசிரியர் கைலாசநாதக்குருக்கள், கலாநிதி கோ. சுந்தரமூர்த்தி, பல்கலைக் கழக நூலகர் சி. முத்துவேள் ஆகியோரது ஆரம்பகால சேவை சொல்லிலடங்காதவை. பின்னர் இக் கோயில் சிவன் கோயிலா? முருகன் கோயிலா? என்ற வாதம் எழுந்தபோது குன்றிலே முருகனை குடிவைப்பது என தீர்மானிக்கப்பட்டது. பிரதிஷ்டா திருவுருவங்கள் மாவிட்டபுரத் திலிருந்து திருவுலாவாக வழியெங்கும் பூஜையுடன் பேராதனைக்கு எடுத்து வரப்பட்டது.
1968 ம் ஆண்டு ஜுன் ஆறாம் திகதி முன்னேஸ்வர பிரம்மஸ்ரீ சு. பாலசுப்ர மணியக் குருக்கள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் குடமுழுக்கு செய்யப் பட்டுள்ளது. இதன் பின் வெள்ளைக் காரப் பாதிரியான ரமேஷ் சுவாமிகள் ஸ்தம்ப மண்டபம் அமைக்க பத்தாயிரம் ரூபாவை வழங்கியதோடு தான் தங்கியி ருக்க 20,000 செலவில் தங்கு மடம் ஒன்றையும் நிறுவியுள்ளார். இதன் பின் பேராசிரியர் நந்தி மற்றும் குழுவினர் தயாரித்த “குரங்குகள்” நாடகமும் பேராசிரியர் அ. துரைராஜா தலைமை யிலும், பேராசிரியர் சி. தில்லைநாதன் கதை, கதை வசனம் அமைத்து தயாரி த்த “கானல் நீர்”, “தகுதி” ஆகிய நாட கங்களும் ஈ.ஒ.ஈ. பெரேரா அரங்கிலும், கண்டியிலும் அரங்கேற்றப்பட்டு நிதி சேகரிக்கப்பட்டுள்ளது. கண்டி இந்து மாமன்றத்தினராலும் மண்டபம் அமைக்கப்பட்டது. 1977 இல் சிவகாமி அம்மை சமேத நடராஜப் பெருமானுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. 1977 ஆடி இனக் கலவரத்தில் ஆலய கதவு உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு, களவாடப்பட்டது. இதே ஆண்டு முருகன் அருளால் நவம்பர் 14 இல் புனராவர்த்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த பாதிப்புக்கு அரச நஷ்ட ஈடாக 1,23,525 ரூபா வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் 1979 இல் பாலஸ்தானம் செய் யப்பட்டு மாணவர்களினால் யாழ்ப்பாண த்திலும், கண்டியிலும் கலை நிகழ்ச்சி கள் நடத்தப்பட்டு பொது மக்களிடம் நிதி பெற்று புது பொலிவுடன் மீண்டும் ஆலயம் புனரமைக்கப்பட்டது. 1980 ம் ஆண்டு ஜுன் இரண்டாம் திகதி குறிஞ்சிக்குமரன் ஆலயம் முன்றாவது மகா கும்பாபிஷேகம் கண்டது. மீண்டும் 1983 இனக் கலவரத்தில் ஆலயம் பாரிய சேதத்துக்குள்ளானது. குருக்கள் வதிவிடம், நூலகம் மாணவர் சங்க மற்றும் பொக்கிஷங்கள் அனைத்தும் எரித்து சூறையாடப்பட்டன. கலவரத்தின் பின் பேராசிரியர் சி. பாலசுப்பிரமணி யத்தின் முயற்சியால் விக்கிரகங்கள் கண்டி கட்டுக்கலை ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட் டன. இதனோடு ஆலயத்தை மீளமைப் பதற்கான ஆர்வமும் நலிவடைந்தது. எனினும் முயற்சிகள் மீண்டும் உயிர் பெற்றன.
பேராசிரியர் சி. தில்லைநாதன் தலைமையில் மாணவர்கள், பொறுப்பான்மைக் குழுவினர், இந்து கலாசார அமைச்சினதும், உயர் அதிகாரிகளினதும் ஒத்துழைப்போடு 1986 இல் ஆலயம் மீண்டும் புனரமைக்கப்பட்டது. பிரம்மஸ்ரீகா.து. சிவசுப்பிரமணியக் குருக்கள் தலைமையில் 1986ம் ஆண்டு ஜுலை மாதம் மீண்டும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் 1.7.1998 இல் மீண்டும் புனரா வர்தன மகா கும்பாபிஷேகம் நடை பெற்றதோடு 12 வருடங்களின் பின்னர் மீண்டும் இவ்வாண்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 2003 ஆம் ஆண்டில் ஆலய தரிசனத்திற்கு மலை ஏறுவதற்கு வசதியாக படிகட்டுகளும், 2007ம் ஆண்டு ஆலய குருக்கள் தங்கும் விடுதியும் சிறப்பாக அமைக்கப்பட்டன.
2008ம் ஆண்டு மாணவர்கள், பொறுப் பான்மைக் குழுவினர், இந்து பட்டதாரி கள் சங்கம் ஆகியோரைக் கொண்ட கும்பாபிஷேக குழு அமைக்கப்பட்டது. 2010 இல் தமது கடமையை அவர்கள் சரிவர நிறைவேற்றியுள்ளனர்.
இந்த ஆலயத்தில் 1986ம் ஆண்டு தொடக்கம் கடமையாற்றும் சிவாச்சாரி யார் நித்தியானந்தன் குருக்களது சேவையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். பூஜைகள், உற்சவங்கள் கிரமமாகவும், மிகச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடைபெற இவரது பங்களிப்பும் முக்கியமானதாகும். மாணவர்கள் கல்வி கற்றுலுடன் நின்றுவிடாது வழிபாடு, நந்தவனம் அமைத்தல், கோயில் பராமரிப்பு, சிரமதானம், வருடாந்த கோயில் சுற்றுலாக்களை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த கும்பாபிஷேகப் பணியில் ஈடுபட்ட பொறுப்பான்மைக்குழு அங்கத்தவர்களான பேராசிரியர் வை. நந்தகுமார் (தலைவர்), இராசையா மகேஸ்வரன் (செயலாளர்), உறுப்பினர்களான வ. தர்மதாசன் பேராசிரியர் சி. சிவயோகநாதன், கலாநிதி த. சிவானந்தவேள், கணக்காளர் ஏ. அரியரட்னம், கலாநிதி எஸ். சிவகுமார், இந்து பட்டாரிகள் சங்க தலைவர் கலாநிதி வ. மகேஸ்வரன், அகில இலங்கை இந்து மாமன்ற செயலாளர் கந்தையா திருநீலகண்டன், மத்திய மாகாண இந்து மாமன்ற தலைவர் துரைசாமிபிள்ளை சிவசுப்பிரமணியம் ஆகியோரது சேவை குறிப்பிடத்தக்கது
.
No comments:
Post a Comment