Saturday, June 18, 2011

மனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா



பேராசிரியர் அழகையா துரைராசா அவர்கள் 1934ம் ஆண்டு கார்த்திகை மாதம் 10ம் திகதி யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டிப் பகுதியில் பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் பாடசாலையிலும் இடை நிலைக் கல்வியை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் பயின்றார்.

இலங்கைப் பல்கலைக்கழகத்தில் குடிசார் பொறியியற் கற்கை நெறியை நிறைவு செய்தார். அன்றைய காலத்தில் கொழும்பில் இயங்கிய இலங்கைப் பல்கலைக்கழகத்திலேயே பொறியியற்பீடம் இயங்கியது.
தன்னுடைய பட்ட மேற்படிப்பை கேம்பிறிஜ் பல்கலைக் கழகத்தில் 1962ம் ஆண்டு கலாநிதிப் பட்டத்துடன் நிறைவு செய்தார். ‘துரை விதி’ என்னும் மணல் துறை சார்ந்த விதி ஒன்றையும் நிறுவினார். இன்றும் கூட குடிசார் பொறியியலில் கற்பிக்கப்படும் Cam- clay locus ஆனது துரை விதியிலிருந்தே பெறப்பட்டது.
தொடர்ந்து இலங்கைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியற்பீடம் ஆரம்பிக்கப்பட்டதும் அங்கும் விரிவுரையாளராகக் கடமையாற்றினார். தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழக பொறியியற்பீட பீடாதிபதியாகவும் கடமையாற்றினார்.
பின்னர் 1988ம் ஆண்டு புரட்டாதி மாதத்திலிருந்து 1994ம் ஆண்டு சித்திரை மாதம் வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணை வேந்தராக கடமையாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொறியியற்பீடம் ஒன்று நிறுவப்படும் என்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுதி மொழியையடுத்தே பேராசிரியர் யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தரானார். ஆனால் இன்று வரை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பொறியியற்பீடம் ஆரம்பிக்கப்படவேயில்லை.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் காணப்படும் ‘அக்பர் பாலம்’ பேராசிரியரினால் நிர்மாணிக்கப்பட்டது. சிங்களப் பேராசிரியர் ஒருவரின் சவாலை ஏற்று மகாவலி ஆற்றில் ஒரேயொரு தூணை மட்டும் நிறுவி இப்பாலம் கட்டப்பட்டது. ‘துரைராசா பாலம்’ என அழைக்கப்பட வேண்டிய அந்தப் பாலம் இன்று ‘அக்பர் பாலம்’ என்றே அழைக்கப்படுகிறது. தமிழர்களாகிய எங்கள் பலருக்கே இந்த விடயம் தெரியாது.
நாங்களாவது அந்தப் பாலத்தின் பெயரை ‘துரைராசா பாலம்’ என அழைப்பதன் மூலம் பேராசிரியரின் திறமைகளை மறைக்காமல் நினைவு கூறப்பட வேண்டியவரை நினைவு கூர்ந்து உண்மைகளை அடுத்த சந்ததியினருக்கு கடத்துவோம்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கடமையாற்றிய போது உடுப்பிட்டியிலிருந்து ஏறக்குறைய முப்பது கிலோ மீற்றர்கள் தூரமுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு துவிச்சக்கர வண்டியிலேயே சென்று வந்தார்.
போர் மேகங்கள் வடமராட்சிப் பகுதியை அதிகமாகச் சூழ்ந்திருந்த அந்தக் காலப்பகுதியிலும் வல்லை வெளியினூடாகப் பயணம் செய்து தன்னுடைய பணியைத் தவறாது செய்தார். மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். எல்லோரிடமும் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் பழகும் ஒழுக்க சீலர். அதனால் எல்லோருக்குமே பேராசிரியர் துரைராசாவை மிகவும் பிடிக்கும்.
தமிழரின் போராட்டத்துக்காக அளப்பரிய சேவைகள் செய்த மாமனிதர் பேராசிரியர் அழகையா துரைராசா அவர்கள் நோயின் கொடிய பிடியில் சிக்கி 1994ம் ஆண்டு ஆனிமாதம் 11ம் திகதி இறைவனடி சேர்ந்தார்.
      இவர் நினைவாக "பேராசிரியர் துரைராசா கிண்ணம்" போட்டி வருடா வருடம் நடைபெற்று வருகிறது. இதில் கொழும்பு, மொரட்டுவ,பேராதனை பல்கலைக் கழகங்கள் பங்கு பற்றுகின்றன. பெருமைப் பட வேண்டிய விடயம் என்னவெனில் கடந்த 5 வருடங்களாக பேராதனை பல்கலை கழகமே வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்து வருகிறது.
                         இங்கு குறிப்பிட வேண்டிய முக்கியமான விடயம் யாதெனில் இந்தப் போட்டித் தொடரை எல்லோரும்
துரையப்பா கிண்ணம்’ என்றே அழைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. ‘பேராசிரியர் துரைராசா கிண்ணம்’ என்றே அழைக்கப்பட வேண்டும். (துரையப்பா என்பவர் யாழ் நகர மேயராக இருந்தவர் – யாழ் துரையப்பா விளையாட்டு மைதானம் இவரின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.) தமிழர்களாகிய நாம் உண்மையை மறைக்காமல், பெயர்களை மருவ விடாது, சரியான வகையில் நினைவு கூருவதன் மூலமே இந்நாட்டில் தமிழ் நிலைக்கவும் தமிழர்கள் நினைவு கூறப்படவும் வழி வகைகள் செய்யலாம். இனி மேலாவது சரியான சொற்களைப் பழக்கத்திற்கு எடுத்துக் கொள்வோமா?

13 comments:

  1. அக்பர் பாலம் என பெயரிடப்பட்டத்தில் தவறில்லை ஏனெனில் அப்பாலம் திறக்கும் போது ஏற்கனவே காலமாகியிருந்த பேராசிரியர் அக்பர் இன் பெயரை வைத்தனர். பேராசிரியர் அக்பர் உம் பேராதனை பொறியியல் பீட வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய ஒருவர். தற்போது நடப்பதைப் போன்று என்னுடைய பெயரைத்தான் வைக்க வேண்டும், நான்தான் திறந்து வைக்கோணும் என்று நடந்துகொள்வதற்கு பேராசிரியர் துரைராசா ஒரு கிழ்த்தரமான ஆளில்லை. deferential settlement ஆல் ஒருபாதிப்பும் ஏற்ப்படாதவாறு நிர்மாணிக்கப்பட்ட பாலம். அது அவருடைய சொந்த தொழில்நுட்பம். பாலம் கட்டியவரின் பெயரைத்தான் வைக்க வேண்டும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. அத்துடன் அவர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திற்கு துணை வேந்தராகச் சென்றது, அன்றைய போர்ச் சூழலில் அங்கு கடமையாற்றுவதற்கு தகுதியான ஒருவரும் முன்வராத காரணத்தினால் தான், அன்றைய தேவையின் நிமிர்த்தம் துணைவேந்தராக பொறுப்பேற்று கொண்டார் என்றுதான் நான் அறிந்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. @guga, பேராசிரியர் அக்பர் தன் பெயரை வைக்கவேணும் என்று அடம் பிடித்திருப்பாரா?

    ReplyDelete
  3. @ எஸ் சக்திவேல் GuGa is 100% correct. u r a fool

    ReplyDelete
  4. guga and last Anonymous are big fat fools

    ReplyDelete
  5. @எஸ் சக்திவேல் - ஏற்கனவே காலமாகியிருந்த பேராசிரியர் அக்பர்

    ReplyDelete
  6. அக்பர் தான் பாலத்தை Design பண்ணினார் என்று சொல்லாத வரை சந்தோசம்!!

    ReplyDelete
  7. >AnonymousJuly 4, 2011 at 2:39 PM

    சொந்தப் பெயரே சொல்லத் தைரியம் இல்லை. இதில் கருத்து வேறையா?

    அல்லது உங்கள் கருத்தின் தரத்தில் உள்ள நம்பிக்கையா?

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. இந்த விவாதம் அவசியமானதா. இருவரும் பேராசிரியர்கள். அவர்களை அவமரியாதை செய்வதற்கு ஒப்பானது. கண்ணன். உடுப்பிட்டி அ.மி. கல்லூரி.

    ReplyDelete
    Replies
    1. who make bridge by
      today call and remember honor man

      Delete
  10. It is indisputable that Prof. Thurairajah is great.

    ReplyDelete
  11. பேராசிரியர் துரைராசா எப்போது காலமானார் எங்கே காலமானார் என்ற தகவல்கள் இல்லை. அவர் 1994 இன் கடைசிப் பகுதியில் நாவல இலங்கை திறந்த பல்கலைகழக பொறியியல் பீடத்தில் குடிசார் பொறியியல் பீட தலைவராக இருந்த போது நோயின் கொடுமையால் காலமானார். அவரின் பூத உடலுக்கான முதல் உத்தியோக பூர்வ அஞ்சலி அங்கேயே நடை பெற்றது. அவருக்கான உத்தியோக பூரவமான அஞ்சலி புத்தகம் இலங்கை திறந்த பல்கலைகழகம் மாத்திரமே முதலில் வெளியிட்டது.

    ReplyDelete
  12. It is not true, he took a position as the Vice Chancellor of Jaffna University when he was at the Open University. During the horrible war, he took that position and kept his family in P'pedro, while all intellectuals ran away from the North. He is really great soul.

    ReplyDelete