Showing posts with label வரலாற்றுப் பதிவுகள். Show all posts
Showing posts with label வரலாற்றுப் பதிவுகள். Show all posts

Tuesday, July 5, 2011

உலகின் மிகப் பெரும் பெண்கள் பல்கலைக் கழகம்!

உலகில் ஒவ்வொரு நாடுகளும் தங்கள் நாட்டின் கல்வி வளர்ச்சியில் மிகவும் முனைப்புடன் திகழ்ந்து வருகிறது. காரணம் சிறந்தக் கல்விதான் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். அந்த வகையில் உலகமே திரும்பிப் பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்தத் துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவூதி அரேபியா ரியாத் தலை நகரில் என்றால் நம்புவீர்களா !? மேலும் படிக்க...

Monday, June 20, 2011

பேராதனை மாணவர் விடுதிகள்

 இலங்கையில் உள்ள பெரும் பாலான பல்கலைக் கழகங்களில் மாணவருக்கான விடுதிகள் உள்ளன. இவை  பல்கலை கழக சட்ட
திட்டங்களுக்கு அமைவாக மாணவர் சேவைக் கிளையினால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
              பல்கலைக் கழக வாழ்க்கையில் விடுதி வாழ்க்கை என்பது மறக்க முடியாதது.காலத்தால் அழியாத நினைவுகளை விட்டுச் செல்லும். அந்த வகையில் பேராதனைப் பல்கலைக்கழகமானது பெரும்பாலான மாணவர்களுக்கு தங்குமிட வசதியை வழங்கி வருகிறது. இங்குள்ள 15 மண்டபங்களிலும் 4 பிக்கு விடுதிகளிலும் சுமார் 3000 க்கு மேற்பட்ட மாணவர்கள் தங்கி தமது பட்டப் படிப்பை மேற்கொள்கின்றனர். அத்துடன் மகா இலுப்பலமாவில் உள்ள விவசாய பீட வளாகத்தில் உள்ள விடுதியானது 1ம் வருட மாணவர்களுக்கு தங்குமிட வசதியை வழங்குகிறது. இது பேராதனையில் இருந்து சுமார் 130km தூரத்தில் அமைந்துள்ளது. விடுதிகளின் ஒழுக்கங்களை பேணுவதில் விடுதி காப்பாளர்களின் பங்கு அளப்பரியது. இவர்கள் கல்வி சார், சாரா உழியர்களாக இருப்பார்கள்.
                       விடுதிகள் கல்வி கற்கும் வசதியுடைய படுக்கை அறைகளைக் கொண்டது.ஒவ்வொரு அறைகளிலும் சராசரியாக 3 மாணவர்கள் மாணவர்கள் தங்கி இருப்பார்கள். பேராதனைப் பல்கலைக்கழக விடுதிகளை பொறுத்த வரை தவணைக் கட்டணமாக 750 ரூபா அறவிடப்படுகிறது. அத்துடன் இங்குள்ள சிற்றுண்டிச் சாலைகளில் குறைந்த விலைகளில் சாப்பாடுகள் வழங்கப் பட்டு வருகிறது.
 .



பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதிகள் வருமாறு:
                                
  ஆண்களுக்கானது:-
  •  ஜேம்ஸ் பீரிஸ் மண்டபம்

  • அருணாச்சலம் மண்டபம்

  • அக்பர்- நெல் மண்டபம்
                    
  • மார்கஸ் மண்டபம்
                
             

  • சரசவி உயன மண்டபம்
  • ஜெயதிலகே மண்டபம்


                   




  • ஹிந்தகல மண்டபம்
  • புதிய அக்பர் மண்டபம்



  • சார் ஐவரர் ஜென்னிங்க்ஸ்   மண்டபம்
                                      
   பெண்களுக்கானது:-
  • ஹில்டா ஒபெயேசெகரா மண்டபம்


      
        
  • விஜேவர்தன மண்டபம் 

        

  • ராமநாதன் மண்டபம் 
                 



  • சங்கமித்த மண்டபம்
       


     பிக்குகளுக்கானது:-
  • சங்கரமைய
  • கேஹெல்பன்னால மண்டபம்

    Saturday, June 18, 2011

    பேராதனைப் பல்கலைக் கழகம்


    இலங்கையின் கடைசி இராஜதானியின் தலைநகராக விளங்கிய கண்டி நகருக்கு அண்மையில் பேராதனைப் பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. இலங்கையின் முதல் பல்கலைக் கழகத்தின் இன்றைய வாரிசாக விளங்குவதும் இதுவே. பல்கலைக்கழகத்திற்கான நிதியுதவி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) இடமிருந்து பெறப்படுகின்றது.
                                                                                                                                   
    இலங்கையின் தலைநகரான கொழும்பில் இருந்து 110 கிலோமீட்டர்தூரத்திலும், கண்டி நகருக்குச் சுமார் 8 கிமீ. தொலைவிலும் உள்ள பேராதனை என்னும் இடத்தில் ஹந்தானை மலைச்  சாரலில் இப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பேராதனை இயற்கை அழகு வாய்ந்த ஒரு பகுதியாகும். இலங்கையின்சுற்றுலா முக்கியத்துவம் உடையதாக விளங்கும் பேராதனை தாவரவியற் பூங்காவும் இங்குதான் அமைந்துள்ளது. இப் பல்கலை கழகத்துக்கான  பிரதான நுழைவாயில் கலாஹா வீதி ஆகும். மகாவலி ஆற்றின் ஒரு பக்கம் பொறியியற் பீடமும் மறு பக்கம் ஏனைய பீடங்களும் அமைந்துள்ளன. அனைத்து பீடங்களையும்   இணைக்கும் நோக்கில் ஒற்றைத் தூணின் உதவியுடன் பாலமொன்று பேராசிரியர் துரைராஜா அவர்களால் நிர்மாணிக்கப்பட்டது.  இதுவே தற்காலத்தில் "அக்பர் பாலம்" என்று அழைக்கப்படுகிறது.

    இலங்கையின் முதலாவது பல்கலைக் கழகம், இலங்கைப் பல்கலைக்கழகம்(University of Ceylon) என்ற பெயரில் 1942 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் 1952 ஆகஸ்ட் 6 ஆம் நாள் பேராதனைக்கு இடம் மாறியது. அன்றிலிருந்து 1972 இல் இலங்கையிலிருந்த அனைத்துப் பல்கலைக் கழகங்களையும் இலங்கைப் பல்கலைக் கழகம் (University of Sri Lanka) என்ற ஒரே அமைப்பின் கீழ்க் கொண்டுவரும்வரை, இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனை (University of Ceylon, Peradeniya) என அழைக்கப்பட்டது. 1972 இல், இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனை வளாகம் (University of Sri Lanka - Peradeniya Campus) எனப் பெயர் மாற்றப்பட்டது. 1978 ஆம் ஆண்டு பல பகுதிகளிலும் அமைந்திருந்த இலங்கைப் பல்கலைக் கழகத்தின் வளாகங்கள் தனித்தனியான பல்கலைக் கழகங்கள் ஆனபோது, இது பேராதனைப் பல்கலைக் கழகம் ஆகியது.        

                                                                          
    "Knowledge is the eye unto all” என்பது மகுட வாசகமாகும். இங்கே விவசாய பீடம், கலைப் பீடம், பல்மருத்துவப் பீடம், பொறியியல் பீடம், மருத்துவப் பீடம், விஞ்ஞான பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம் என்பவற்றுடன் கால்நடை முருத்துவமும், கால்நடை அறிவியலும் இணைந்த ஒரு பீடமும் உள்ளன. ஏறத்தாழ 6600 மாணவர்கள்  பட்டப் படிப்பை முடித்துக்கொண்டு வருடாந்தம் வெளியேறுகின்றனர்.